ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு ட்ரெய்லர்.. வேற லெவலில் விஜய்!

வாரிசு ட்ரெய்லர்.. வேற லெவலில் விஜய்!

விஜய்

விஜய்

Varisu - Official Trailer | வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன்.

வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என்று அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக வாரிசு இருக்கும் என்று தயாரிப்பாளர் முன்னதாக ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியது போலவே ட்ரெய்லரும் உள்ளது.

' isDesktop="true" id="867357" youtubeid="9fux9swQ5AQ" category="cinema">

நன்றி: Sun TV.

First published:

Tags: Actor Vijay, Varisu