ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

2011 டூ 2022.. அப்படியே இருக்கும் விஜய்.. வைரலாகும் வாரிசு ஸ்டில்ஸ்!

2011 டூ 2022.. அப்படியே இருக்கும் விஜய்.. வைரலாகும் வாரிசு ஸ்டில்ஸ்!

வாரிசு

வாரிசு

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான விஜய்யின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 11 வருசத்துக்கு முன்னாடி விளம்பரத்துல பாத்த மாதிரி அப்படியே இருக்காரு என்று தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் மற்றும் விஜய் 67 படத்தின் தயாரிப்பாளருமான லலித் குமார் வெளியிடுகிறார். வாரிசு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம், தொலைக்காட்சி உரிமம், வெளிநாட்டு விநியோகம், இந்தி டப்பிங் ரைட்ஸ் உள்ளிட்ட பல வியாபாரங்கள் ஏற்கனவே முடிவடைந்தன.

ஆனால் தமிழக வெளியீடு உரிமை இறுதியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரான லலித் குமாருக்கு தில் ராஜு வழங்கியுள்ளார்.  அதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டொக்கோமோ விளம்பரத்துல பார்த்தது மாதிரி அப்படியே இருக்காரு என்று தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay