ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வைரலாகும் அப்டேட்!

விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வைரலாகும் அப்டேட்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா சண்முகந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தில் முதல் சிங்கிள் வீடியோ அக்டோபர் 23-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா சண்முகந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதைப்பற்றிய பரபரப்பு இன்னும் குறையவில்லை. கடந்த சில மாதங்களாக, வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்களில் இருந்து கசிந்த காட்சிகளும், படங்களும் சமூக வலைதளங்களில் பரவி, படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியது. இந்நிலையில் நடிகர் விஜய் அக்டோபர் 27-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

Also read... சோவியத் யூனியனில் 3.48 கோடி பேர் பார்த்த தேவரின் யானை படம்

அதோடு வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படம் குடும்பத்தை மையப்படுத்திய கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய ஃபீல் குட் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வீடியோ வரும் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 20ம் தேதி வெளியாகளாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay