ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு திரைப்படத்திற்கு சிக்கல்... விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம்!

வாரிசு திரைப்படத்திற்கு சிக்கல்... விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம்!

வாரிசு

வாரிசு

விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் இந்தியா மட்டும் இல்லாமல் பல வெளிநாடுகளிலும் வெளியாகிறது. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் இந்தியா மட்டும் இல்லாமல் பல வெளிநாடுகளிலும் வெளியாகிறது.  குறிப்பாக அமெரிக்காவில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வியாபாரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு திரைப்படத்திற்கான வெளிநாட்டு உரிமை பல மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் அமெரிக்க, கனடா நாடுகளுக்கான தணிக்கை நடைபெற்றது. அதில் அந்த திரைப்படத்தை தணிக்கை குழுவினர் ரிஜெக்ட் செய்திருக்கின்றனர் என கூறப்படுகிறது.  குறிப்பாக படம் முழுமையாக தயாராகாத காரணத்தால் அவர்கள் படத்தை ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள் என தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாடுகளை சேர்ந்த விநியோகஸ்தர்கள் ஒரே தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை தமிழகம், கேரளா,  கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் தமிழ் பதிப்பு மட்டும் வெளியாகிறது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெலுங்கு பதிப்பை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் அந்த பதிப்பு இன்னும் தயாராகவில்லை.  அதற்கான தணிக்கை வரும் திங்கட்கிழமையே நடைபெற இருக்கிறது.  இதன் காரணமாக 11-ம் தேதி வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு அந்த இரு மாநிலங்களிலும் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் வேறு தேதியில்தான் படம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதன் காரணமாக வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது தமிழ் பதிப்பை மட்டும் தமிழகம் கேரளா ஆந்திர மாநிலங்களில் வெளியிடுவார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. வாரிசு திரைப்படம் முதலில் 12 ஆம் தேதி வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.  ஆனால் இறுதி நேரத்தில் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். அதனால் ஏற்பட்ட குழப்பமே இதற்கெல்லாம் காரணம் எனவும் தெரிவிக்கின்றனர்.

Also read... வாரிசு - துணிவு படங்கள் சிறப்பு காட்சிகள்... வெளியானது சூப்பர் அப்டேட்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Varisu