ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படம் வெற்றியடைய வேண்டும் - காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜயின் தாயார்!

வாரிசு படம் வெற்றியடைய வேண்டும் - காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜயின் தாயார்!

ஷோபா சந்திரசேகர்

ஷோபா சந்திரசேகர்

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி, நடிகர் விஜயின் தாயார் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் மற்றும் விஜய் 67 படத்தின் தயாரிப்பாளருமான லலித் குமார் வெளியிடுகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 24-ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. வாரிசு திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டியும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

Also read... அவள் உலக அழகியே... த்ரிஷாவின் ரீசென்ட் க்ளிக்ஸ்!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உலக மக்களின் நன்மைக்காக அம்மனை தரிசிக்க வந்ததாக கூறினார். மேலும், விஜய் அரசியலுக்கு வருவது குறித்த தனக்கு எதுவும் தெரியாது எனவும் பதிலளித்தார். தொடர்ந்து விஜயின் வாரிசு படம் வெற்றியடைய அனைவரும் கடவுளின் பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay