Home /News /entertainment /

விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தான செயலி, சமூக வலைதள பக்கங்கள் தொடக்கம்

விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தான செயலி, சமூக வலைதள பக்கங்கள் தொடக்கம்

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம்

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம்

விநாயகர் புகைப்படத்திற்கு முன்னிலையில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம்.

  • News18
  • Last Updated :
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தான செயலி மற்றும் சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 

நடிகர் விஜயின் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.  வரும் காலத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் இந்த அமைப்பில் உள்ள நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகளாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தமிழகத்தில் 180 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.  அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகில் உள்ள பனையூரில் நடைபெற்றது.

Also read... சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார்!

புஸ்ஸி ஆனந்த் தலைனையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளனர்.  அத்துடன் விஜய் மக்கள் இயக்கத்திற்கு என தனி சமூக வலைதள பகுதிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.



மேலும் ரத்த தானத்தை ஊக்க வைக்கும் வகையில் தனியாக ரத்ததான செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளனர். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Blood Donation, Vijay makkal iyakkam

அடுத்த செய்தி