ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தாயார் ஷோபாவுடன் விஜய்... சமூக வலைதளங்களில் வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்

தாயார் ஷோபாவுடன் விஜய்... சமூக வலைதளங்களில் வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்

விஜய் அடுத்ததாக தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜுவின் படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் அடுத்ததாக தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜுவின் படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் அடுத்ததாக தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜுவின் படத்தில் நடிக்கவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தாயார் ஷோபாவுடன் தளபதி விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கை கடந்த டிசம்பர் மாதத்தில் முடித்துக் கொண்ட விஜய் அடுத்ததாக தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜுவின் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனை தமிழில் நாகார்ஜுனா, கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார். மற்ற விஜய் படங்களில் இருந்து மாறுபட்டு, இந்த திரைப்படம் உருவாகவுள்ளது.

இதையும் படிங்க : காதலுக்கு மரியாதை போல ஃபீல் குட் படமாக தளபதி 66 - கதையைக் கேட்டு விஜய் சொன்ன அந்த விஷயம்!

பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேதி குறித்த விபரம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் லுக்குடன் விஜய் தனது தாயார் ஷோபாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஏப்ரல் 14-ம்தேதி பீஸ்ட் படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே தேதியில் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தையும் அதே தேதியில், வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதையும் படிங்க : மக்கள் பணியில் விஜய் ரசிகர்கள்... பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பால், முட்டை வழங்கி உதவி

First published:

Tags: Actor Vijay