ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கு சிக்கல்… பிரச்னை சரியாக வாய்ப்புள்ளதா?

வாரிசு படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கு சிக்கல்… பிரச்னை சரியாக வாய்ப்புள்ளதா?

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

தில் ராஜு சாமர்த்தியமாக முடிப்பாரா? அல்லது தான் வகுத்த விதிமுறைகளை கடைபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியிட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் படத்திற்கு ஏன் இந்த நிலை என்பது குறித்து பார்க்கலாம்.

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.  இதற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டனர்.

  வாரிசு படத்தை தமிழ்,  தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டிருக்கிறார். விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பதால் இங்கு வாரிசு படத்திற்கு குறைந்தது 500 திரையரங்குகள்  கிடைக்கும்.

  குழந்தை நட்சத்திரம் டூ நடிகை...! அனிகா எப்படி மாறிட்டாங்க பாருங்க..

  அதே போல் ஆந்திரா - தெலுங்கானா பகுதிகளில் தயாரிப்பாளர் தில்ராஜு கட்டுப்பாட்டில் சுமார் 40% திரையரங்குகள் உள்ளன. அந்த திரையரங்குகளில் வாரிசு திரைப்படத்தை திரையிட தில் ராஜு திட்டமிட்டு இருக்கிறார்.  அதன் காரணமாகவே வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு பிரம்மாண்டமாக வெளியாகும் என சமீபத்தில் கூறினார்.

  வாரிசுப் படத்தை ஆந்திரா,  தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தற்போது தெலுங்கு பிலிம் சேம்பர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹ ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் Waltair Veerayya ஆகிய படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதற்காக பிலிம் சேம்பரின் செயலாளர் பிரசன்னா குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  52 வயதில் இவ்ளோ அழகா இருக்க முடியுமா..! ரம்யா கிருஷ்ணனின் வைரல் படங்கள்

  தெலுங்கு பிலிம் சேம்பரின் இந்த முடிவுக்கு வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தான் காரணம் என தெரிவிக்கின்றனர். 2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரஜினி நடித்த பேட்ட படத்தின் தெலுங்கு டப்பிங் படத்தை, இதே பிரசன்ன குமார் வெளியிட்டார்.

  ஆனால் அதற்கு தில்ராஜு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் அளித்தார்.  மேலும் பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் புதிய விதியை உருவாக்கினார் தில்ராஜு. அதுவே தற்போது வாரிசுக்கு எதிராக உள்ளது.

  தில் ராஜு ஏற்படுத்திய சட்டம் தற்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளதால், வாரிசு திரைப்படத்தை  தெலுங்கில் வெளியிட  பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தில் ராஜு சாமர்த்தியமாக முடிப்பாரா? அல்லது தான் வகுத்த விதிமுறைகளை கடைபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

  நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்காக செந்தில் ராஜா.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay