ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குறுக்கே வந்த ரெட் ஜெயண்ட்.. குழப்பத்தில் இருந்த வாரிசு டீம்... ரிலீசுக்கு முன்பான வியாபாரத்தில் நடந்தது என்ன?

குறுக்கே வந்த ரெட் ஜெயண்ட்.. குழப்பத்தில் இருந்த வாரிசு டீம்... ரிலீசுக்கு முன்பான வியாபாரத்தில் நடந்தது என்ன?

வாரிசு

வாரிசு

வாரிசு படத்தை தமிழகத்தில் ரெட் நிறுவனம் வெளியிட விரும்பியது. இதனால் மற்ற நிறுவனங்கள் பின்வாங்கின.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் தமிழக உரிமையை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். அந்தப் படத்தின் வியாபாரம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி கூட்டணியில் தில் ராஜு தயாரித்துள்ள படம் வாரிசு. இந்தப் படத்திற்கு இன்னும் ஒரு வார படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு படத்தின் வியாபாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே வியாபாரப் பணிகளை தில்ராஜு தொடங்கினார். அதில் முதல் கட்டமாக ஆடியோ வெளியீட்டு உரிமையை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார்.  அதன் பின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனத்திற்கு 47 கோடி ரூபாய்க்கு கொடுத்தார். இதைத்தொடர்ந்து டிஜிட்டல் உரிமம் வெளிநாட்டு உரிமை இந்தி டப்பிங் உரிமை ஆகியவற்றையும் விற்பனை செய்தார். அந்த உரிமைகள் அனைத்தும் பெரும் தொகைக்கு விற்பனையாகின.

Thalapathy Vijay Varisu first single will be a Kuthu song, varisu update, varisu music composition, varisu music, வாரிசு அப்டேட், வாரிசு பாடல்கள், varisu firstlook poster, varisu meaning, varisu meaning in tamil, varisu release date, varisu music director, varisu movie, varisu cast, varisu story, varisu images, vijay varisu bike, varisu bike price, varisu bike details, வாரிசு பைக் விலை, வாரிசு விஜய், thalapathy vijay varisu, thalapathy vijay age, vijay 48, thalapathy vijay, thalapathy vijay birthday, vijay birthday, தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பிறந்தநாள், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தளபதி விஜய் ரசிகர்கள்,
நடிகர் விஜய்

அனைத்து உரிமங்களும் விற்பனை செய்யப்பட்டாலும்,  தமிழக வெளியிட்டு உரிமையில் சற்று குழப்பம் ஏற்பட்டு வந்தது. வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழக உரிமையை 80 கோடி ரூபாய் என நிர்ணயித்தார்.  அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது.  ஆனால் விஜயின் பீஸ்ட் திரைப்படம் 60 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்தில் ஷேர் தொகை கொடுத்ததால், தில்ராஜு சொல்லும் விலைக்கு வாங்க யாரும் முற்படவில்லை.  இருந்தாலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. அதேசமயம் தமிழக உரிமையை ஏரியா வாரியாக பிரித்து விற்கவும் தில்ராஜு ஆலோசித்தார்.

தீபாவளிக்கு ரிலீஸான சர்தார், ப்ரின்ஸ்.. 4 நாட்கள் வசூல் விவரம் இதுதான்…!

தமிழக உரிமை இறுதியாக நிலையில் ராக்போர்ட் நிறுவனம் வாரிசு படத்தை தமிழகத்தில் வெளியிட முடிவெடுத்தது. அதற்கான முயற்சி நடைபெற்ற நிலையில்  ரெட் ஜெயின்ட் நிறுவனமும் வாரிசு திரைப்படத்தை வெளியிட விரும்பியது.  இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன.  ரெட் ஜெயின்ட் நிறுவனம் வாரிசு படத்தை வெளியிட நினைத்ததால், பேச்சு வார்த்தையில் இருந்த  நிறுவனங்கள் பின்வாங்க தொடங்கின. இதனால் பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய படங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான லலித் குமார் கைப்பற்றியுள்ளார்.  இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னையில் கையெழுத்து ஆகியது.  தில்ராஜ் கூறிய என்பது கோடி இல்லை என்றாலும் 70 கோடிக்கு மேல் தமிழக உரிமை கையெழுத்தாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லலித்குமார் விஜயிக் மாஸ்டர் படத்தை தயாரித்து வெளியிட்டார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் அடுத்த்ய்  நடிக்கும் படத்தையும் அவரே தயாரிக்கிறார்.

கசிந்துருகும் காதல்.. ரொமான்டிக் படங்கள் பிடிக்குமா? அமேசான் ப்ரைமில் உள்ள சூப்பரான லவ் மூவிஸ்!

வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் 280 கோடி ரூபாய் எட்டும் என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செப்டம்பர் மாதம்  கூறியிருந்தது. அந்த இலக்கை தற்போது வாரிசு வியாபாரம் நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் கேரளா கர்நாடகா வியாபாரம் இறுதியாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Published by:Murugadoss C
First published:

Tags: Actor Vijay, Tamil movies