ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் vs அஜித் - நம்பர் ஒன் சர்ச்சை குறித்து வாரிசு தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

விஜய் vs அஜித் - நம்பர் ஒன் சர்ச்சை குறித்து வாரிசு தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

விஜய் - தில் ராஜு

விஜய் - தில் ராஜு

எதை பேசினாலும் சர்ச்சையாக்கிவிடுகிறார்கள். 20 நொடி வீடியோவை வைத்து முடிவு செய்துவிடாதீர்கள். ஒருவரை கிண்டல் செய்வது என் நோக்கமல்ல. சினிமாவில் நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சமீபத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளரான தில் ராஜு தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சர்ச்சையானது. அவரது பேட்டியில் தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் ஒன் நடிகர். அவருக்கு அடுத்த இடத்தில்தான் அஜித் குமார் இருக்கிறார். அதனால் வாரிசு படத்துக்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும். இதுகுறித்து சென்னையில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கே.ராஜன் போன்றோர் தில் ராஜுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பரமணியன் தயாரிப்பாளர் தில் ராஜுவைக் கடுமையாக சாடினார்.

என்ன இப்படி சொல்லிட்டாங்க?! துணிவு பாடல் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மஞ்சு வாரியர் பதிலடி

இந்த நிலையில் தனது பேச்சு சர்ச்சையானதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, எதை பேசினாலும் சர்ச்சையாக்கிவிடுகிறார்கள். 20 நொடி வீடியோவை வைத்து முடிவு செய்துவிடாதீர்கள். ஒருவரை கிண்டல் செய்வது என் நோக்கமல்ல. சினிமாவில் நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay