ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வாரிசு இந்தியிலும் வெளியாகும்… தயாரிப்பாளர் தில் ராஜு அறிவிப்பு…

விஜய்யின் வாரிசு இந்தியிலும் வெளியாகும்… தயாரிப்பாளர் தில் ராஜு அறிவிப்பு…

விஜய் - தில் ராஜு

விஜய் - தில் ராஜு

வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இந்தியிலும் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான தில் ராஜூ இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

இதில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் யோகிபாபு, ஷாம், குஷ்பூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வாரிசு படத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக 3 போஸ்டர்கள் மற்றும் போட்டோக்கள் வெளியிடப்பட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆல்யா மானசாவின் புதிய சீரியல்... ஆனால் இந்த முறை வேறு சேனல்!

இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் 70 மில்லியன் பார்வையை யூடியூபில் நேற்று கடந்து சாதனை படைத்துள்ளது. அடுத்த கட்டமாக இரண்டாவது பாடலை வெளியிட படக்குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

' isDesktop="true" id="846287" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்ட காட்சிகளுடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வாரிசு திரைப்படம் தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரிலும் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் அதேநாளில் வாரிசு திரைப்படம் இந்தியிலும் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார். இதனால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பான் இந்தியா அரசியல் த்ரில்லர் படத்தில் நடிக்கும் தனுஷ்… பூஜை இன்று நடைபெற்றது…

இதற்கிடையே வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இதனை தயாரிப்பாளர் தில் ராஜு எப்படி முடிவுக்கு கொண்டு வருவார் என்பதை திரைத்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

First published:

Tags: Actor Vijay