ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யூடியூபில் சம்பவம் செய்யும் வாரிசு ட்ரெய்லர்.. ஒரு மணி நேரத்தில் இவ்வளவு வியூசா?

யூடியூபில் சம்பவம் செய்யும் வாரிசு ட்ரெய்லர்.. ஒரு மணி நேரத்தில் இவ்வளவு வியூசா?

வாரிசு ட்ரெய்லர்

வாரிசு ட்ரெய்லர்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடித்துள் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி முந்தைய பல ரிக்கார்டுகளை உடைத்து வருகிறது. ட்ரெய்லர் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளதால் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், துணிவு படத்தின் ட்ரெய்லரைப் போலவே இந்த ட்ரெய்லரிலும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் குடும்பக் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்திருக்கிறார். ட்ரெய்லர் வெளியான அரை மணி நேரத்தில் 3 மில்லியன் வியூஸ்களை வாரிசு ட்ரெய்லர் கடந்தது.

ஒரு மணி நேரத்திற்குள்ளாக இந்த ட்ரெய்லர் 5 மில்லியன் பார்வையை கடந்து  புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெய்லரைப் பார்க்க-

' isDesktop="true" id="867405" youtubeid="9fux9swQ5AQ" category="cinema">

இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம்,ஸ்ரீகாந்த், குஷ்பு, யோகிபாபு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, நந்தினி ராய், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், விடிவி கணேஷ், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை தமன். வசனம், கூடுதல் திரைக்கதை மற்றும் பாடல்களை விவேக் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு கார்த்திக் பழனி. எடிட்டிங் பிரவீன் கே.எல்.,

புரொடக்சன் டிசைன் சுனில் பாபு,வைஷ்ணவி ரெட்டி, வி.எப்.எக்ஸ். யுகேந்தர், சண்டை பயிற்சி ராம் லக்ஸ்மன், பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், நடனம் ஜானி மாஸ்டர்.

First published:

Tags: Actor Vijay, Varisu