ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்… ஜானி மாஸ்டர் ட்வீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு…

வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்… ஜானி மாஸ்டர் ட்வீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு…

விஜய்யுடன் ஜானி மாஸ்டர்

விஜய்யுடன் ஜானி மாஸ்டர்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்களுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் ரஞ்சிதமே பாடலுக்கு நடனத்தை வடிவமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வாரிசு படத்திலிருந்து வெளியான முதல் பாடல் 6 கோடி பார்வைகளை கடந்துள்ள நிலையில் அடுத்த பாடலின் அப்டேட்டை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் வெளியிட்டுள்ளார்.

    பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். க்ளைமேக்ஸ் காட்சியை தவிர்த்து மற்ற அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது.

    விஜய்யுடன் முதன்முறையாக முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகிபாபு, குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    வாரிசு படத்திலிருந்து விஜய், ராஷ்மிகா மந்தனா ஆடிய ரஞ்சிதமே பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ரஞ்சிதமே பாடலை விஜய் – மானஸி பாடியுள்ளனர்.

    Shalini Ajith: உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... ஷாலினி அஜித் பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்!

    பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்களுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் ரஞ்சிதமே பாடலுக்கு நடனத்தை வடிவமைத்துள்ளார்.

    ' isDesktop="true" id="841506" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

    ' isDesktop="true" id="841506" youtubeid="KUN5Uf9mObQ" category="cinema">

    ' isDesktop="true" id="841506" youtubeid="PhxfspwMdww" category="cinema">

    இந்நிலையில் அடுத்த பாடலுக்கு விஜய் ரசிகர்கள் தயாராக இருக்குமாறும், எதிர்பார்ப்பை அதிகமாக வைத்துக் கொள்ளும்படியும் கூறி ஜானி மாஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘வாரிசு படத்திலிருந்து அடுத்த சூப்பர் ஹிட் பாடல் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் பெல்லாரியில் இந்த பாடலை படமாக்கியுள்ளோம். இந்த பாடலில் சில சூப்பரான நடன ஸ்டெப்புகளை இடம்பெறச் செய்துள்ளோம். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள்…’ என்று கூறியுள்ளார்.

    நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸாகும் பாபா திரைப்படம்… ரஜினி ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்…

    வாரிசு திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியிடப்படுகிறது. இதனை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வாரிசு படத்தின் வெளியீட்டை விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay