ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

39 நிமிஷத்துல இவ்வளவு லைக்ஸா? இணையத்தை அதிர வைத்த நடிகர் விஜய்!

39 நிமிஷத்துல இவ்வளவு லைக்ஸா? இணையத்தை அதிர வைத்த நடிகர் விஜய்!

வாரிசு இசை வெளியீட்டு விழா

வாரிசு இசை வெளியீட்டு விழா

மாஸ்டர் படப்பிடிப்பின் போது நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இதுவரையில் விஜய்யின் பக்கத்தில் அதிமாக லைக் செய்யப்பட்ட பதிவாகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த வீடியோ ஒன்று 39 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தன.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதில் ரசிகர்களுக்கு தனது இளம் வயது அனுபவங்கள், குட்டி ஸ்டோரி என பல சுவாரஸ்ய கதைகளை கூறி அவர்களை குஷிப்படுத்தினார். அப்போது ரசிகர்களுடன் செல்வி வீடியோ ஒன்றை நடிகர் விஜய் எடுத்துக்கொண்டார்.

அந்த வீடியோவை "EnNenjilKudiyirukkum" ஹேஷ்டேகுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ 39 நிமிடங்களில் 1 லட்சம் லைக்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை WorldTopTweets என்ற பக்கம் பகிர்ந்திருந்தது.

இதேபோல் நடிகர் விஜய், மாஸ்டர் படப்பிடிப்பின் போது நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இதுவரையில் விஜய்யின் பக்கத்தில் அதிமாக லைக் செய்யப்பட்ட பதிவாகும். இதுவரை 5.45 லட்சம் லைக்ஸ்கள் குவித்துள்ளது.

வாரிசு ஆடியோ லாஞ்சில் எடுக்கப்பட்ட வீடியோ செல்பி இந்த பதிவின் லைக்ஸ் எண்ணிக்கையை விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Vijay, Selfie, Vijay