ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதி 67 அப்டேட்… விஷாலை நேரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ!

தளபதி 67 அப்டேட்… விஷாலை நேரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ!

நிவின் பாலி- விஜய் - விஷால்

நிவின் பாலி- விஜய் - விஷால்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஷால் நடித்து வரும் மார்க் ஆன்டனி படத்திற்கு சென்று, அவரை சந்தித்து பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தளபதி 67 படத்தில் விஜய்யின் வில்லன்கள் குறித்த அடுத்த அப்டேட் வந்துள்ளது. வில்லன்கள் லிஸ்டில் நிவின்பாலி மற்றும் விஷால் இணையப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் உறுதித் தன்மை குறித்து பார்க்கலாம்….

    விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67-ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு தளபதி 67 என ஒர்க்கிங் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

    விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த லோகேஷ் கனகராஜ், முழுநீள தீவிர ஆக்சன் படமாக தளபதி67 அமையும் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்பார்ப்பு எகிறியது.

    ''நல்ல படத்துக்கு அதுவே விளம்பரம்..'' துணிவு பட புரொமொஷன் குறித்து அஜித் சொன்ன விஷயம்!

    இந்தப்படத்தில் டான் கேரக்டரில் விஜய் நடிப்பதாக தெரிகிறது. இதற்காக படத்தில் வலுவான் வில்லன்கள் இருக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார். இதையொட்டி கேஜிஎஃப் படத்தில் வில்லனாக கவனம் ஈர்த்த சஞ்சய்தத், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரகாஷ்ராஜ், மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகர் பிரித்விராஜ் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு முன்னணி நடிகரான நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரேமம் படத்தின் மூலமாக நிவின் பாலி இந்தியா முழுக்க ரசிகர்களை பெற்றிருந்தார்.

    தமிழ் சினிமாவில் அடுத்த நட்சத்திர ஜோடி… காதலை அறிவித்த கவுதம் கார்த்திக்- மஞ்சிமா!

    இதுபற்றி நிவின் பாலியிடம் கேரள ஊடகத்தினர் கேள்வி கேட்டபோது புன்னகையை மடடும் பதிலாக அளித்து விட்டு சென்றார்.

    அடுத்ததாக தளபதி 67-இல் விஷால் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதை உறுதி செய்யும் வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஷால் நடித்து வரும் மார்க் ஆன்டனி படத்திற்கு சென்று, அவரை சந்தித்து பேசியுள்ளார். அந்த வகையில் விஷாலும் விஜய் படத்தில் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது வரையில், தளபதி 67 படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், நிவின் பாலி, பிருத்விராஜ், விஷால் உள்ளிட்டோர் இடம்பெறுவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay, Actor vishal