ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துடன் மோதப் போகும் தளபதி 66...

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துடன் மோதப் போகும் தளபதி 66...

விஜய் - பிரபாஸ்

விஜய் - பிரபாஸ்

தமிழ்ப்புத்தாண்டையொட்டி, கன்னட படமான கேஜிஎஃப். 2 உடன் விஜய்யின் பீஸ்ட் மோதியது. இதில் கேஜிஎஃப் 2 அதிக வரவேற்பை பெற்றபோதிலும், பீஸ்ட்டின் வசூல் ஏதும் பாதிக்கவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுரூஷ் படத்துடன் விஜய் 66 மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகுபலி 2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர், பிரபாஸ் நடித்த சாஹோ படுதோல்வியை சந்தித்தது. இதன்பின்னர் வெளியான ராதே ஷ்யாம் படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

இதனால், கே.ஜி.எஃப். 2 இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'சலார்' திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பில் பிரபாசும் அவரது ரசிகர்களும் உள்ளனர்.

விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

இதற்கிடையே பிரபாஸ் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகி வரும் ஆதிபுரூஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், கிரித்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஓம் ராவத் இயக்கி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படம், பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு படங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம், 5 மொழிகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதால், பிரபாசுடன் நேரடியாக மோதுகிறார் தளபதி விஜய்.

இதையும் படிங்க - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெற்றிமாறன் - சூரியின் விடுதலை!

தமிழ்ப்புத்தாண்டையொட்டி, கன்னட படமான கேஜிஎஃப். 2 உடன் விஜய்யின் பீஸ்ட் மோதியது. இதில் கேஜிஎஃப் 2 அதிக வரவேற்பை பெற்றபோதிலும், பீஸ்ட்டின் வசூல் ஏதும் பாதிக்கவில்லை.

ஐதராபாத்தில் தற்போது தளபதி 66 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, ஜெயசுதா உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

First published:

Tags: Actor prabhas, Actor Vijay