முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய்யின் ‘தளபதி 66’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு… வைரலாகும் போஸ்டர்

விஜய்யின் ‘தளபதி 66’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு… வைரலாகும் போஸ்டர்

விஜய் - ராஷ்மிகா மந்தனா

விஜய் - ராஷ்மிகா மந்தனா

அடுத்த மாதம் 22ம்தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி, தளபதி 66 படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆக்சன் படத்தில் நடித்து வரும் விஜய், இந்த படத்தில் குடும்பக் கதையில் நடிக்கிறார்.

இருப்பினும் விஜய்யிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆக்சன், காமெடி, காதல் காட்சிகள் உள்ளிட்டவை இந்த படத்தில் இருக்கும் என இயக்குனர் வம்சி கூறியுள்ளார்.

விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர் 

வசூல் ரீதியாக பீஸ்ட் படம் வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் அமையவில்லை. இதனால் ரசிகர்களின் பார்வை விஜய்யின் 66வது படம் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில் 2 விஜய் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில் இன்னொரு ஹீரோயின் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், ஜெயசுதா உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்டடாக இருக்கும் இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெற்றிமாறன் - சூரியின் விடுதலை! 

ஒன்று அல்லது இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடன காட்சிகளை அமைப்பதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டர் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தளபதி 66 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அடுத்த மாதம் 22ம்தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி, தளபதி 66 படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

First published:

Tags: Actor Vijay