ரசிகரின் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன விஜய்

தற்கொலை செய்து கொண்ட ரசிகரின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ரசிகரின் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன விஜய்
விஜய்
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். அவருக்கு ரசிகர்களும் ஏராளம். இந்நிலையில் கள்ளக்குயிச்சியை அடுத்துள்ள, ரிஷி வந்தியத்தில் பாலமுருகன் என்ற விஜய் ரசிகர் நேற்று தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அவருக்கு வயது (21)

தற்கொலை செய்து கொண்ட பாலா விஜய், கடைசியாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும்.. லவ் யூ தலைவா” என்று பதிவிட்டு அதில் விஜய் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நாளில் தனது மற்ற ட்வீட்களில், இங்கே ஒருவருக்காவது என்னை பிடிக்குமா என்றும், நான் அவ்வளவு கேவலமானவனா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாலா.

ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் #RIPBala என்ற ஹேஷ்டேக் உருவாக்கி இரங்கல் பதிவிட்டனர் ரசிகர்கள்.

மேலும் விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ், நடிகர் சாந்தனு உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இரங்கல் தெரிவித்திருப்பதோடு, எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதையும் கூறியுள்ளனர்.இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை போனில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் விஜய், உயிரிழந்த பாலமுருகனின் தாய் மலர்விழி மற்றும் குடும்பத்தினரிடம் 15 நிமிடத்துக்கு மேல் போனில் பேசி ஆறுதல் கூறியுள்ளார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

 
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading