பிகில்: ‘வெறித்தனம்’ பாடல் பாடும் விஜய் - படக்குழு அறிவிப்பு!

news18
Updated: July 8, 2019, 8:13 PM IST
பிகில்:  ‘வெறித்தனம்’ பாடல் பாடும் விஜய் - படக்குழு அறிவிப்பு!
பிகில் படக்குழு
news18
Updated: July 8, 2019, 8:13 PM IST
பிகில் படத்தின் ‘வெறித்தனம்’ பாடலை நடிகர் விஜய் பாடுகிறார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதுவரை படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இன்று மாலை முக்கிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படத்தின் முதல் பாடலான வெறித்தனம் என்ற பாடலை நடிகர் விஜய் பாடுகிறார். பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.


இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடிகர் விஜய் வெறித்தனம் பாடலை பாடியிருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்காக விஜய்க்கு நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.



Also watch

First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...