Home /News /entertainment /

விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகிறது தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகிறது தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு போஸ்டர்

தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு போஸ்டர்

Thalapathy 66 First Look : நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பக் கதையில் விஜய் நடிப்பதால் அவரது ஃபேமிலி ஆடியன்ஸ் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

    விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் டைட்டில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

    தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார்.

    தளபதி 66 படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,ஷாம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    இதையும் படிங்க - கே.ஜி.எஃப். ஹீரோ யாஷ் உடன் இணையும் விஜய் பட நடிகை

    2 பாடல்களுக்கு பிரபுதேவா நடனத்தை வடிவமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பக் கதையில் விஜய் நடிப்பதால் அவரது ஃபேமிலி ஆடியன்ஸ் மிகுந்த எதிர்பார்ப்பில்  இருக்கிறார்கள்.

    தளபதி 66 படத்தின் ஷூட்டிங் 2 மாதத்திற்கு முன்பே தொடங்கி நடந்து வரும் நிலையில் விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கு வெளியாகும் என்று தகவல்கள் கூறப்பட்டது.







    இந்நிலையில் நாளை மறுதினம் ஜூன்21-ம்தேதி மாலை 6 மணி 1 நிமிடத்திற்கு தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்!! வைரலாகும் புகைப்படங்கள்

    விஜய் பிறந்த நாளையொட்டில் பல்வேறு போஸ்டர்களை உருவாக்கி விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி