அனிருத் இசையில்... சொந்தக் குரலில் ஒரு குட்டிக் கதை சொல்லும் மாஸ்டர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அனிருத் இசையில்... சொந்தக் குரலில் ஒரு குட்டிக் கதை சொல்லும் மாஸ்டர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விஜய் - அனிருத்
  • Share this:
மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் குறித்து படக்குழு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம், கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றது. அப்போது சூட்டிங்கில் இருந்த விஜயை கட்டாயமாக அழைத்துச் சென்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், நெய்வேலியில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று பா.ஜ.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் நெய்வேலியில் குவிந்தனர். அதனால், மாஸ்டர் படமும் விஜயும் பேசுபொருளாயினர்.


இந்தச் சூடு அடங்குவதற்குள் படத்தின் முதல்பாடல் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதைத்தொடர்ந்து இன்று வெளியான அடுத்த அறிவிப்பில் ஒரு குட்டிக் கதை என்று தொடங்கும் முதல் பாடலை அனிருத் இசையில் விஜய் தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்