ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் இன்று அணிந்த சட்டையின் விலையைக் கேட்டால் "மெர்சல்" ஆகிடுவீர்கள்… எத்தனை ஆயிரம் தெரியுமா?

விஜய் இன்று அணிந்த சட்டையின் விலையைக் கேட்டால் "மெர்சல்" ஆகிடுவீர்கள்… எத்தனை ஆயிரம் தெரியுமா?

விலை உயர்ந்த சட்டையுடன் இன்றை நிகழ்ச்சயில் பங்கேற்ற விஜய்.

விலை உயர்ந்த சட்டையுடன் இன்றை நிகழ்ச்சயில் பங்கேற்ற விஜய்.

நடிகர் விஜய்க்கும் ,ராகுல்காந்திக்கும் உடையில் ஒற்றுமை உண்டு எதிர்கால அரசியல் கணக்குகளும் ஒத்துபோகுமா? இந்த கட்டுரையில் உண்டு சுவாரஸ்ய தகவல்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சினிமா நடிகர் நடிகைகள் அணியும் உடை, அவர்களின் கார் ,கட்டும் வாட்ச், காலில் அணியும் ஷூ, கையில் கொண்டு வரும் பேக் என அனைத்தும் சர்வதேச பிராண்டு வகைவகை சார்ந்தது. அது மட்டுமல்லாது விலையும் நம் கனவில் காணாததாக இருக்கும். அவ்வப்போது சினிமா நட்சத்திரங்கள் அணியும் பொருட்கள் பேசு பொருள் ஆவது உண்டு...

பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் தங்களின் ஸ்டேட்டஸை காட்டுவதற்கு உயரிய விலை கொண்ட பொருட்களை வாங்குவதும், அணிவதும் வழக்கம்.

அந்தவகையில் இன்று நடிகர் விஜய் அணிந்த சட்டையின் விலை புருவம் உயரச்செய்துள்ளது. நடிகர் விஜய் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதை தள்ளி வைத்திருந்த நடிகர் விஜய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பனையூரில் அவரது அலுவலகத்தில் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த சில ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

செல்ஃபி புள்ள..! நடிகை ரைசாவின் க்யூட் மொட்டை மாடி செல்ஃபீஸ்

அதற்காக நடிகர் விஜய் இன்று தனது அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். இனோவா கிரிஸ்டா காரில் ரசிகர்களின் ஆரவாரத்தோடு  "அழகிய தமிழ்மகனாக " வந்திறங்கிய  நடிகர் விஜய், வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார்.

பார்ப்பதற்கு மிக ஸ்டைலாகவும் சிம்பிளாகவும் அவர் அணிந்து வந்திருந்த உடை, காணப்பட்டாலும் அவர் அணிந்து வந்திருந்த வெள்ளை சட்டையும்  அந்த பிராண்டும் அதன் விலையும் நம்மை மெர்சலாக செய்கிறது

மாரி செல்வராஜ் இயக்கப்போதும் 4-ஆவது படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறது… ஹீரோ யார் தெரியுமா?

சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அணிந்திருந்த டி- சர்ட் விலை ரூ.40 ஆயிரம் என பா ஜக வினர் விமர்சனம் செய்தனர். அத்தோடு நிற்காமல் அந்த டி சர்ட் BUR BERRY  என்கிற பிராண்டு வகை சாந்தது என்றும், அதன் விலை 40 ஆயிரம் என்றும் கூறியது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது. இறுதியில் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டி சர்டை தான் ராகுல் காந்தி அணிந்ததாக விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வைத்தது.

இன்று நடிகர் விஜய் அணிந்து வந்ததும் அதே BURBERRY பிராண்ட் வகை வெள்ளை சட்டையை தான். சட்டையில் அந்த பிராண்ட் லோகோ தெளிவாக தெரியும் வகையில் அந்த சட்டை காணப்பட்டது. இணையத்தில் நடிகர் விஜய் அணிந்த அதே வகையான சட்டை விலையை தேடிய போது அதன் விலை நம் புருவத்தை உயரச்செய்தது Burberry ப்ராண்டை சார்ந்த  Sherwood stretch cotton poplin என்கிற வகையினை சார்ந்த அந்த சர்ட்டின் விலை 32ஆயிரத்து 790  ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் ஒரு மாத ஊதியம் அந்த சட்டையின் விலை என்பது நடிகர்களின் செல்வ செழிப்பை காட்டுவதாக அமைந்துள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Actor Vijay