Home /News /entertainment /

அட்லீ பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்திய விஜய் – ஷாரூக்கான்… வைரலாகும் புகைப்படம்…

அட்லீ பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்திய விஜய் – ஷாரூக்கான்… வைரலாகும் புகைப்படம்…

விஜய், ஷாரூக்கானுடன் அட்லீ

விஜய், ஷாரூக்கானுடன் அட்லீ

ஒரே ஃப்ரேமில் ஷாரூக்கான் மற்றும் விஜய்யை பார்த்த உற்சாகத்தில் இரு நடிகர்களின் ரசிகர்களும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அட்லீ பிறந்த நாளுக்கு விஜய் மற்றும் ஷாரூக்கான் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அட்லீ வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஒரே ஃப்ரேமில் ஷாரூக்கான் மற்றும் விஜய்யை பார்த்த உற்சாகத்தில் இரு நடிகர்களின் ரசிகர்களும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கிவுள்ளார்.



ஷாருக்கானை நடிப்பில் அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. அட்லி, ப்ரியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அட்லியின் மனைவியான ப்ரியா திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அட்லீ தனது 36வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் விஜய் மற்றும் ஷாரூக்கான் ஆகியோர் நேரில் பங்கேற்று அட்லீயை வாழ்த்தியுள்ளனர்.

போனி கபூருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித் ரசிகர்கள்… செய்த சம்பவம் இதுதான்…

அட்லீ தற்போது ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு பின்னர் விஜய் படத்தை அட்லீ இயக்குவார் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay, Atlee, Shah rukh khan

அடுத்த செய்தி