விஜய் சேதுபதியின் இந்த செயலால் வியந்த ரசிகர்கள்!

முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கதாநாயகியின் தந்தையாக நடிப்பது அவரின் ரசிகர்கள் உட்பட பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

news18
Updated: June 17, 2019, 11:33 AM IST
விஜய் சேதுபதியின் இந்த செயலால் வியந்த ரசிகர்கள்!
நடிகர் விஜய்சேதுபதி
news18
Updated: June 17, 2019, 11:33 AM IST
நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகியின் தந்தையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பிசியாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. எப்போது ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் அனைத்து விதமான கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வருபவர் இவர்.

சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக வந்தார். இந்த படம் சர்வதேச பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளது. ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் விக்ரம் வேதா படங்களில் வில்லனாக நடித்தார்.

சீதக்காதியில் வயதான நாடக கலைஞர் வேடம் ஏற்றார். தற்போது சிந்துபாத், கடைசி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. மற்ற மொழிகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன.

Also read... விஜய்சேதுபதியின் மலையாள பட டீசர் வீடியோ!

தற்போது மலையாளத்தில் ஜெயராமன் நாயகனாக நடிக்கும் மார்கோனி மாத்தாய் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் இவர் அறிமுகமாகும் முதல் படமும் இதுவே. இந்த படத்தின் டீசர் நேற்று நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் விஜய் சேதுபதி நாயகியின் தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் படத்தில் வில்லனும் விஜய் சேதுபதிதான் என்பது போன்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
Loading...
முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கதாநாயகியின் தந்தையாக நடிப்பது அவரின் ரசிகர்கள் உட்பட பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also see...

First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...