ஹோம் /நியூஸ் /entertainment /

இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஜய் சேதுபதி... சோஷியல் மீடியாவில் மழையாய் பொழிந்த வாழ்த்துகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஜய் சேதுபதி... சோஷியல் மீடியாவில் மழையாய் பொழிந்த வாழ்த்துகள்

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் விஜய் சேதுபதி டூயட்டும், விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், சக நடிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்த்தி தெரிவித்துள்ளனர்.

  ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர் என விஜய் சேதுபதி தொடாத வேடங்களே இல்லை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் அவருக்கு ஆரம்பித்த ஏறுமுகம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  இடையே விஜய் சேதுபதிக்கு சில படங்கள் சறுக்கினாலும், இன்றளவிலும் மாஸ் ஹீரோவாக இருந்து கொண்டிருக்கிறார்.விக்ரம் வேதா படத்தில் அவர் காட்டிய மிரட்டலான நடிப்பு, மாஸ்டரில் இடம்பெற்ற விஜய்க்கே போட்டி கொடுக்கும் வில்லத்தனம் ஆகியவை விஜய் சேதுபதிக்கு மாற்று இல்லை என்பதை உறுதி செய்தன.

  சூப்பர் டீலக்ஸ் படத்தில் யாரும் ஏற்றிடாத கதாப்பாத்திரம் அவருக்கு தேசிய விருதை அளித்தது. எதையும் பெரிதாக பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் கேஷுவலாக எடுத்துக் கொண்டு அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

  இந்நிலையில் இன்று 44வது பிறந்த நாள் கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு திரை நட்சத்திரங்கள், சினிமா துறையினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் விஜய் சேதுபதி டூயட் பாடிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்று அவரது பிறந்த நாளையொட்டி, பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay Sethupathi