விஜய் சேதுபதியுடன் 4-வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

news18
Updated: June 11, 2019, 3:11 PM IST
விஜய் சேதுபதியுடன் 4-வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
நடிகர் விஜய் சேதுபதி
news18
Updated: June 11, 2019, 3:11 PM IST
நடிகர் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் 4-வது முறையாக இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.

இந்த மூன்று படங்களும் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள நிலையில், இந்தப் படமும் அத்தகைய பின்புலத்தில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Also read... த்ரிஷாவாக நடிக்க எனக்கு விருப்பமே இல்லை: புயலைக் கிளப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு க/பெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பட பூஜையில் படக்குழு


பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல் வரிகளை வைரமுத்து எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
Loading...
அறம், ஐரா, தும்பா போன்ற படங்களைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது.

முன்னதாக ஐஸ்வர்யா ராஜேசை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கனா படம் வெற்றியடைந்ததைத் தொடந்து இந்தப் படமும் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்பதால் ரசிகர்களிடம் எதிர்ப்பார்பு அதிகரித்துள்ளது.

Also see...

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...