அப்துல் கலாமின் கனவை நனவாக்க முயற்சித்த மாணவி - உதவிக்கரம் நீட்டிய விஜய்சேதுபதி!

news18
Updated: June 25, 2019, 8:00 PM IST
அப்துல் கலாமின் கனவை நனவாக்க முயற்சித்த மாணவி - உதவிக்கரம் நீட்டிய விஜய்சேதுபதி!
நடிகர் விஜய்சேதுபதி
news18
Updated: June 25, 2019, 8:00 PM IST
அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து விண்வெளி பயிற்சிக்குத் தேர்வான மாணவிக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.8 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மகள் உதயகீர்த்திகா. அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த இவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மீதான ஈர்ப்பால், அவரைப்போல விஞ்ஞானியாக ஆசை ஏற்பட்டது.

2012, 2014-ம் ஆண்டுகளில் இஸ்ரோ சார்பில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரை போட்டிகளில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற இவருக்கு, உக்ரைன் நாட்டில் உள்ள கார்கியூ நேஷனல் ஏரோ ஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் படிக்க இடம் கிடைத்தது. குடும்பத்தில் வறுமை இருந்தபோதும் சிலரது உதவியால் அந்தப் படிப்பை முடித்து 92.5 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தற்போது அவருக்கு போலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மையத்தில், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பிற நாட்டு விண்வெளி வீரர்களுடன் விண்வெளி குறித்த பயிற்சியில் இடம்பெற அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் போலந்து நாட்டிற்குச் செல்ல அவரிடம் பண வசதி இல்லை. இதனைக் கேள்விப்பட்ட விஜய்சேதுபதி உடனடியாக தனது உதவியாளர்கள் மூலம் கீர்த்தனாவுக்கு தேவையான பணம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்ததுடன், கீர்த்தனாவுடன் போனில் பேசி அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.சர்வதேச அளவில் 20 மாணவர்கள் இந்தப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து உதய கீர்த்திகா மட்டுமே இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: நீட் தேர்வு - நடிகை ஜோதிகா கேள்வி

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...