முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி

ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

Karthi Vijay Sethupathy - ஹீரோ கேரக்டரை விட வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி மிரட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சந்தனம் கேரக்டர் மிகப்பெரும் பாராட்டுக்களை பெற்றது.

  • Last Updated :

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ராஜு முருகன் அடுத்ததாக கார்த்தியை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லன் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும், விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சித்தனர். இதற்கு விஜய் சேதுபதி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாம்.

திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய் பீம்!

இந்நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக ராஜு  முருகன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து, வலுவான வில்லனை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்தியில் உருவாகி வரும் ஷாரூக்கானின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் வந்திய தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண் கலங்கிய பிரிகிடா 

இதைத் தொடர்ந்து இரும்புத் திரை பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி திரைக்கு வரவுள்ளது.

top videos

    ஹீரோ கேரக்டரை விட வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி மிரட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சந்தனம் கேரக்டர் மிகப்பெரும் பாராட்டுக்களை பெற்றது.

    First published:

    Tags: Actor Karthi, Actor Vijay Sethupathi