Home /News /entertainment /

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்…

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்…

மகன் சூர்யாவுடன் விஜய் சேதுபதி

மகன் சூர்யாவுடன் விஜய் சேதுபதி

Viduthalai Movie : விடுதலை படம் குறித்து முன்பு பேட்டி அளித்திருந்த வெற்றி மாறன், படத்தின் ஹீரோ சூரி என்றும், கதையின் ஹீரோ விஜய் சேதுபதி என்றும் கூறியிருந்தார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பானஅதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

    முன்னதாக ரானும் ரவுடி தான், சிந்துபாத் படங்களில் தந்தையுடன் சூர்யா சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயமோகன் எழுதியுள்ள துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றி மாறன் இயக்கத்தில், விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் சூர்யா மீது எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்!

    விடுதலை படத்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெற்றி மாறன் இயக்கி வருகிறார். ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் செட் அமைக்கப்பட்டு, மருத்துவ முதலுதவிகளுடன் விடுதலை படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

    வழக்கமாக காமெடி கேரக்டரில் நடிக்கும் சூரி, இந்த படத்தில் போலீசாக நடித்திருக்கிறார். கைதி கேரக்டரில் விஜய் சேதுபதி படத்தில் இடம்பெற்றுள்ளார். விஜய் சேதுபதிக்கு வாத்தியார் என்ற கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இளம் வயது விஜய் சேதுபதி கேரக்டரில், அவருடைய மகன் சூர்யா சேதுபதியை நடிக்க வைப்பதற்கு வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    விடுதலை படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரே ஷெடூலில் படத்தை முடித்து விட வெற்றி மாறன் திட்டமிட்டுள்ளார்.

    நடிகர் ஜெய்யின் எண்ணித்துணிக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    இந்தப்படம் குறித்து முன்பு பேட்டி அளித்திருந்த வெற்றி மாறன், படத்தின் ஹீரோ சூரி என்றும், கதையின் ஹீரோ விஜய் சேதுபதி என்றும் கூறியிருந்தார். விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

    வடசென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றிப் பட வரிசையில் விடுதலை படமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்தை முடித்துக் கொண்டு சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இணையவுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay Sethupathi

    அடுத்த செய்தி