அனைவருக்கும் அரசியல்புரிதல் உள்ளது வரவேற்கத்தக்கது: நடிகர் விஜய் சேதுபதி!

வாக்குபதிவு இயந்திரம் குறித்து பல்வேறு கருத்துகளும், சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வருகின்றது. அதை நானும் பார்த்தேன் ஆனால் அதற்கு என்ன தீர்வு என்று எனக்கு தெரியவில்லை என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

news18
Updated: April 18, 2019, 1:36 PM IST
அனைவருக்கும் அரசியல்புரிதல் உள்ளது வரவேற்கத்தக்கது: நடிகர் விஜய் சேதுபதி!
: நடிகர் விஜய் சேதுபதி
news18
Updated: April 18, 2019, 1:36 PM IST
சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் அரசியல் பேச ஆரம்பித்துள்ளனர். அனைவருக்கும் அரசியல் புரிதல் உள்ளது வரவேற்கத்தக்கது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி, முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு என் வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.


மேலும், அனைவருக்கும் அரசியல்புரிதல் உள்ளது வரவேற்கத்தக்கது. வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பல்வேறு கருத்துகளும், சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வருகின்றன. அதை நானும் பார்த்தேன் ஆனால் அதற்கு என்ன தீர்வு என்று எனக்குத் தெரியவில்லை என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

Also see...Loading...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...