ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதியின் DSP படத்திற்கு வெற்றி விழா கொண்டாடிய படக்குழுவினர்…

விஜய் சேதுபதியின் DSP படத்திற்கு வெற்றி விழா கொண்டாடிய படக்குழுவினர்…

டி.எஸ்.பி. படக்குழுவினர்

டி.எஸ்.பி. படக்குழுவினர்

படம் நேற்று வெளியான நிலையில், இன்று படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் சேதுபதியின் DSP படத்திற்கு படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

விஜய் சேதுபதி, அனுக்ரீத்திவாஸ் முன்னணி கதாபாத்தில் நடித்துள்ள படம் டி.எஸ்.பி. இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன் ராம் இயக்கியுள்ளார். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூக்கடை வியாபாரியின் மகனாக வாஸ்கோடகாமா என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சீமராஜா, எம்.ஜி.ஆர். மகன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று வெளியான டி.எஸ்.பி. படத்திற்கு கலவை விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன.

‘காந்தரா vs தும்பாட்’ எது சூப்பர் படம்? நெட்டிசன்கள் மோதல்…

இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படம் நேற்று வெளியான நிலையில், இன்று படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர்.

பிரபாகர், புகழ், ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு வெங்கடேஷ் தினேஷ் கிருஷ்ணன், பாடல்கள் யுகபாரதி பொன்ராம் விஜய் முத்துப் பாண்டி, எடிட்டிங் விவேக் ஹர்ஷன், கலை வீரசமர், சண்டை காட்சிகள் தினேஷ் சுப்பராயன், நடனம் தினேஷ் – ஷெரிஃப். உள்ளிட்டோர் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.

First published:

Tags: Vijay sethupathi