விஜய் சேதுபதியின் இந்தி படம் ஓடிடியில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் சேதுபதியின் இந்தி படம் ஓடிடியில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் சேதுபதி
வலுவான திரைக்கதையை கொண்ட படம் என்பதால் மும்பைக்கர் விஜய் சேதுபதிக்கு, பாலிவுட்டில் ரசிகர்களை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மும்பைக்கர் இந்திப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர்ஸ் பேனர் சார்பாக எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.
நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை, சினிமா ரசிகர்களை மாநகரம் திரைப்படம் விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியதுடன், அவர்கள் எதிர்பாராத காட்சிகளை உள்ளே வைத்து லோகேஷ் கனகராஜ் புகுந்து விளையாடியிருப்பார்.
இந்தப் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து இதே தயாரிப்பு நிறுவனத்திற்காக கைதி திரைப்படத்தை லோகேஷ் இயக்கினார். இதுவும் மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் மாநகரம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு, படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் மும்பைக்கர் என்ற அந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
EXCLUSIVE: Vijay Sethupathi - Vikrant Massey starrer #Mumbaikar bagged by JIO Studios for exclusive direct premiere skipping theatres.
The film likely to release on JIO and Netflix simultaneously. An official announcement is expected at the earliest. pic.twitter.com/9aUXiV2TkY
மாநகரத்தில் சென்னையை மையமாக வைத்ததுபோல், மும்பைக்கரில் மும்பையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸி, தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வலுவான திரைக்கதையை கொண்ட படம் என்பதால் மும்பைக்கர் விஜய் சேதுபதிக்கு, பாலிவுட்டில் ரசிகர்களை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் ஜியோ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.