ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay Sethupathi: முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் நன்கொடை!

Vijay Sethupathi: முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் நன்கொடை!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்றவற்றிற்கு இந்த கொரோனா நிதி பயன்படுத்தப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் விஜய் சேதுபதி கொரோனா நிவாரண நிதியாக ரூ 25 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

  இந்தியாவில் தற்போது கொரோனா 2-ம் அலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து, நாள்தோறும் கொரோனா பாதிப்பு 30,000-த்தைக் கடந்தது. தற்போது 13,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து பிரபலங்களும், தொழிலதிபர்களும், பொதுமக்களும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi