Home /News /entertainment /

புஷ்பா 2 படத்தில் இணையும் விஜய் சேதுபதி… விரைவில் அறிவிப்பு

புஷ்பா 2 படத்தில் இணையும் விஜய் சேதுபதி… விரைவில் அறிவிப்பு

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

Pushpa 2 Vijay Sethupathy : முதல் பாகத்திற்காக முதலில் வன அதிகாரி வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அல்லு அர்ஜுனின்  நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா படத்தின்  முதல் பாகம் மெகா ஹிட்டானது.  இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    முதல் பாகத்தின்போதே அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அடுத்த பாகமாக புஷ்பாதி ரூல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

    தற்போது, ​​படத்தின் தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதியை ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்கு அணுகியதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இதற்கு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் பாகத்திற்காக முதலில் வன அதிகாரி வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அவரது படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட சிக்கலால் படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறினார். அந்த கேரக்டர் பகத் பாசிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    முதல் பாகம் மெகா ஹிட் ஆனால் அடுத்த பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதற்கேற்ற வகையில் திரைக்கதையை இயக்குனர் சுகுமார் வடிவமைத்து வருகிறார்.

    முதல் பாகத்தில் புஷ்பா எப்படி உருவாகி, செம்மரக் கடத்தல் தொழிலில் டான் ஆகிறான் என்பதை விவரித்தது. 2ம் பாகம் வெளிநாடுகளிலும் புஷ்பாவின் செல்வாக்கு எப்படி அமைகிறது என்பதை விவரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புஷ்பா 2 படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.  முதல் பாகத்தில் மிரட்டி பகத் பாசில் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறார். முதல் பாகம் பான் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியானது. இரண்டாம் பாகத்தை இன்னும் கூடுதலாக சர்வதேச மொழிகளில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Vijay sethupathi

    அடுத்த செய்தி