புதிய சாதனை படைத்தது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி..

நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி புதிய சாதனை படைத்துள்ளது.

புதிய சாதனை படைத்தது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி..
விஜய்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 2:47 PM IST
  • Share this:
கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யின் ‘மாஸ்டர்’படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவரது வீட்டில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது விசாரணைக்காக நெய்வேலியில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்டார் விஜய்.

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஒத்துழைத்த விஜய் மீண்டும் நெய்வேலி சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். வருமான வரித்துறை சோதனைக்குப் பின்னர் படப்பிடிப்பு தளத்தில் தினமும் விஜய்யைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

ரசிகர்களின் கூட்டம் அதிகரித்த நிலையில் நெய்வேலியில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அங்கிருந்த பேருந்து ஒன்றின் மீது ஏறி ரசிகர்கள் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் விஜய்.


இந்த செல்ஃபி விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ரசிகர்களாலும், திரை பிரபலங்களாலும் இந்த செல்வி ரீட்வீட் செய்யப்பட்டு பகிரப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட செல்ஃபி என்ற சாதனையை விஜய்யின் புகைப்படம் பெற்றிருக்கிறது. இதற்கு முன்னதாக ஷாரூக்கானின் ட்விட்டர் பதிவுதான் முதலிடத்தில் இருந்தது. அதை தற்போது பின்னுக்குத் தள்ளியிருக்கிறது விஜய்யின் நெய்வேலி செல்ஃபி.



இதை விஜய் ரசிகர்கள் #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் கொண்டாடி ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading