பிரபல நடிகர் மகனின் கனவை நனவாக்கிய விஜய் - வைரல் க்ளிக்!

பிரபல நடிகர் மகனின் நீண்ட நாள் கனவை நடிகர் விஜய் நனவாக்கியுள்ளது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Web Desk | news18
Updated: December 2, 2018, 12:47 PM IST
பிரபல நடிகர் மகனின் கனவை நனவாக்கிய விஜய் - வைரல் க்ளிக்!
நடிகர் விஜய்
Web Desk | news18
Updated: December 2, 2018, 12:47 PM IST
பிரபல நடிகர் மகனின் நீண்ட நாள் கனவை நடிகர் விஜய் நனவாக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தனது ரசிகர்களை ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற அடைமொழியுடன் தான் அழைத்து மகிழ்வார். அதேபோல் அவரது படம் தொடங்கி அனைத்தையும் அவரது ரசிகர்கள் தங்களுக்கான கொண்டாட்டமாக நினைத்து கொண்டாடுவது வழக்கம்.

அவரது பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கியும், ஏழை மக்களுக்கு உதவும் வகையிலும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் பிரபல நடிகர் நாசரின் மகன் பிறந்த நாளில் அவருக்கு நேரடியாக சென்று நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த செயல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

நடிகர் நாசரின் மகன் தீவிர விஜய் ரசிகர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பைசல் சாலை விபத்தில் சிக்கினார். அதையடுத்து அவர் தொடர் சிகிச்சையிலும் இருந்து வருகிறார்.

நடிகர் விஜய் பிறந்த நாளில் கலந்து கொண்டு வாழ்த்தியதன் மூலம் பைசலின் நீண்ட நாள் கனவு நனவாகிவிட்டதாக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த கைதி! - வீடியோ

First published: December 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...