மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
கடந்த வருடம் அக்டோபர் 29 ஆம் தேதி கன்னடத்தின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
நடிகர் விஜய் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த வருடம் அக்டோபர் 29 ஆம் தேதி கன்னடத்தின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தமிழ் சினிமாவை சேர்ந்த சூர்யா, விஷால் போன்ற நடிகர்கள் பெங்களூரு சென்று புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் பெங்களூரு சென்று புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த புகைப்படங்களும், வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
புனித் ராஜ்குமார் நடிப்பில் முடிவடைந்த திரைப்படங்களையும், பாதியில் நிற்கும் திரைப்படங்களையும் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. முதல் படமாக ஜேம்ஸ் என்ற திரைப்படத்தை வெளியிடுகின்றனர். இந்தப்படத்தின் அனைத்து காட்சிகளிலும் புனித் ராஜ்குமார் நடித்து முடித்திருந்தார். ஆனால் டப்பிங் பேச வில்லை. இப்போது அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் தம்பிக்கு பதில் டப்பிங் பேசியுள்ளார். மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.