ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

“90களில் எனக்கு ஒரு போட்டியாளர் இருந்தார்..” விஜய் சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

“90களில் எனக்கு ஒரு போட்டியாளர் இருந்தார்..” விஜய் சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

விஜய்

விஜய்

Varisu Vijay | 1990களில் ஒரு போட்டியாளர் உருவாகினார். அவர் மேல, அவர் வெற்றி மேல இருக்கிற பயத்துல நானும் ஓட ஆரம்பித்தேன் - விஜய்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

என் போட்டியாளரை ஜெயிக்க வேண்டும் என ஓடிக்கொண்டே இருந்தேன் என்று நடிகர் விஜய் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார்.

வாரிசு பாடல் வெளியீட்டு தேதி வெளியானதிலிருந்து விஜய் என்ன பேசப் போகிறார்? என்ன கதை சொல்லப் போகிறார்? யாரை தாக்கி பேச போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் பாடல் வெளியீட்டு பேசிய விஜய் கதைக்கு குட்டிக்கு கூறினார். அதன் பிறகு மன்றத்தை பற்றி பேசி முடித்தார்.

அரசியல் பேசுவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள். அரசியல் பேசவில்லை. இதனால் அவ்வளவுதான் என்று ரசிகர்கள் ஏமாந்தனர். அப்போதுதான் முதல் Twist வந்தது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராஜூ மற்றும் ரம்யா ஆகியோர் விஜய் இடம் கேள்வி ஒன்றை முன் வைத்தனர். அதில் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சின்ன சிரிப்புடன் கடந்து போகிறீர்களே எப்படி என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த விஜய் சிரித்துக் கொண்டே “பழகி போச்சு...” என்றார். மேலும் “தேவையான விமர்சனங்களும், தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மை ஓட வைத்துகொண்டு இருக்கிறது” என்றார் விஜய். அத்துடன் இன்னொரு குட்டி கதையை கூறுகிறேன் என இரண்டாவது Twist-ஐ கொடுத்தார் விஜய்.

விஜய் அதை சொன்னதும் ரசிகர்கள் உற்சாகமாகினர். இதில் நிச்சயம் அரசியல் இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.

இரண்டாவது குட்டி ஸ்டோரியை சொல்லும் போது 1990களில் ஒரு போட்டியாளர் உருவாகினார். அவர் மேல, அவர் வெற்றி மேல இருக்கிற பயத்துல நானும் ஓட ஆரம்பித்தேன். அவர தாண்டணும்னு போட்டி போட்டுக்கிட்டே இருந்தேன் என விஜய் கூறினார்.

அவர் அந்த கதையை கூற தொடங்கியதும் நடிகர் அஜித்தை பற்றி பேசுகிறார் என்றே முதலில் அரங்கத்தில் இருந்த பெரும்பாலானோர் நினைத்தனர். விஜய்யும் அஜித்தம் அந்த காலகட்டத்தில்தான் நாயகனாக அறிமுகமாகி நடித்துகொண்டு இருந்தனர். ஆனால் அங்கு மீண்டும் ஒரு Twist வைத்தார் விஜய்.

அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய் என்று கூறினார். அவர் அதை சொல்லி முடித்ததும் அரங்கம் அதிர ரசிகர்களின் கைத்தட்டல் சத்தமும், கத்தல் சத்தமும் நிரம்பியது.

போட்டியாளரை ஜெயிக்கணும் என்கிற வெறி இருக்கணும் அந்தப் போட்டியாளரா நீங்களே தான் இருக்கணும் இதை நீங்களும் ஃபாலோ பண்ணுங்க என ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் செய்தார். விஜயின் இந்த பேச்சுக்கு பிறகு வாரிசு படத்தின் பாடல் வெளியிடப்பட்டது.

First published:

Tags: Actor Vijay, Actor vijay Speech, Varisu, Vijay speech