தளபதி 66-ல் விஜய்யின் புதிய லுக் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வருகிறது.
கலவை விமர்சனங்களைப் பெற்ற போதிலும், தமிழகத்தை பொருத்தளவில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. வலுவான கதை மற்றும் திரைக்கதை இல்லாவிட்டாலும், விஜய் என்ற ஒற்றை மனிதர் படத்தை வெற்றி பெறச் செய்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வழக்கமான விஜய் படங்களைப் போல் வெறுமனே ஆக்சன் மட்டும் அல்லாமல், குடும்பக்கதை, காமெடி, எமோஷன் என சற்று வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டதாக, தளபதி 66 உருவாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க - வசூலில் அமீர் கானின் தங்கல் சாதனையை முறியடித்தது கே.ஜி.எஃப். 2... பாகுபலி 2 வசூலை முந்துமா?
தெலுங்கு சினிமாவில் எமோஷனலான காட்சிகளுக்கு பெயர்போன வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்குகிறார். புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ள ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க - Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்
முன்னணி இசையமைப்பாளர் தமனின் இசையில் 2 பாடல்கள் பணி நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் குறைந்த நாட்களில் ஷூட்டிங்கை நிறைவு செய்து விட்டு, தளபதி 66 படக்குழுவினர் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க - ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா...
ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தபோது, விஜய்யின் விமான நிலைய வீடியோக்கள் வைரலாகின. இந்நிலையில், காரில் விஜய் செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதைப் பார்க்கும்போது, பீஸ்ட் படத்தின் அறிவிப்பு விழாவில் பங்கேற்ற லுக்கைப் போன்று விஜய்யின் தோற்றம் உள்ளது. படம் முழுவதும் இந்த கெட் அப்பில்தான் இருப்பாரா அல்லது பாடல் காட்சிகளுக்கான லுக்கான என்பது விரைவில் தெரியவரும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.