ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அசால்டா ரூ.100 கோடி வசூல்.. விஜயின் துப்பாக்கி ரிலீஸாகி 10 வருஷங்கள்!

அசால்டா ரூ.100 கோடி வசூல்.. விஜயின் துப்பாக்கி ரிலீஸாகி 10 வருஷங்கள்!

துப்பாக்கி படத்தில் விஜய்

துப்பாக்கி படத்தில் விஜய்

மீண்டும் விஜய் – முருகதாஸ் கூட்டணி ஏற்படுமா அந்தப் படம் துப்பாக்கி 2 ஆக அமையுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான துப்பாக்கி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் இந்த படத்துடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

  விஜய் – இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் முதல் படமாக கலைப்புலி தாணு தயாரிப்பில், துப்பாக்கி கடந்த 2012-ல் இதே நாளில் வெளியானது. இந்த படத்திற்கு முன்பாக விஜய் வேலாயுதம், நண்பன் படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் கேரக்டர்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக துப்பாக்கி படத்தில் அவரது ஜெக்தீஷ் கதாப்பாத்திரம் அமைந்திருந்தது.

  ராணுவ உளவுப்பிரிவில் உயர் அதிகாரியாக இருக்கும் விஜய், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த இடத்திலும் அவரது ஆப்பரேஷன்கள் தொடரும். நண்பன் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அச்சு அசல் மிலிட்டரிக்காரனாவே ஜெக்தீஷ் கேரக்டருக்கு விஜய் மாறியிருப்பார்.

  ஹன்சிகாவின் திருமண வீடியோ..! உரிமையை பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்..

  படத்தில் இடம்பெற்ற காஜல் அகர்வால், வில்லன் வித்யுத் ஜம்வான், ஜெயராம், சத்யன், மனோபாலா உள்ளிட்டோரின் கதாப்பாத்திரங்கள் நிறைவாக இருந்தன. துப்பாக்கி வெளிவந்த காலகட்டத்தில், விஜய்யின் மிகப்பெரும் ஆக்சன் படமாக இது அமைந்திருந்தது.

  நடிகை ஆண்ட்ரியாவின் ‘சண்டே வைப்ஸ்’..!

  உடல் மொழி, அறிவுப்பூர்வமான நடவடிக்கைகள், அதிரடி சண்டைக் காட்சிகள், காஜல் அகர்வாலுடன் ரொமான்டிக் மொமென்ட், தங்கை சென்டிமென்ட் என விஜய் அனைத்து ஏரியாவிலும் விஜய் இந்த படத்தில் கில்லியாக விளையாடியிருப்பார். விஜய்க்கு இணையான வில்லனை நிறுத்தியதால், படத்தின் காட்சிகள் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தன.

  இறுதியில் துப்பாக்கி படத்தை ராணுவ வீரர்களுக்காக சமர்ப்பித்து, விஜய் மீண்டும் மிலிட்டரி முகாமுக்கு திரும்பிச் செல்லும் எமோஷனல் காட்சியுடன் படத்தை முடித்திருப்பார் முருகதாஸ். இதேபோன்று, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பங்களிப்பு படத்தில் அதிகம்.

  கொஞ்சமும் போரடிக்காத காட்சிகளை சந்தோஷ் சிவன் படம்பிடித்திருப்பார். பாடல்களும், பின்னணி இசையும் துப்பாக்கி படத்தின் வேல்யூவை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றன. ஹாரிஸின் ஒன் ஆஃப் தி பெஸ்டாக துப்பாக்கி அமைந்தது.

  படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்றளவும் இந்த படத்தின் காட்சிகள் ஃப்ரெஷ்ஷாக இருப்பதை மறுக்க முடியாது. துப்பாக்கி படம் பீரங்கியாக வெடித்ததை தொடர்ந்து, விஜய் – முருகதாஸ் கூட்டணி கத்தி, சர்கார் படங்களில் இணைந்தது. இந்நிலையில், துப்பாக்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

  மீண்டும் விஜய் – முருகதாஸ் கூட்டணி ஏற்படுமா அந்தப் படம் துப்பாக்கி 2 ஆக அமையுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay, Kollywood