’நாளைய முதல்வரே’- திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்: பரபரப்புக்கு மத்தியில் நிர்வாகிகளைச் சந்தித்த விஜய்

திருச்சியில் நாளைய முதல்வரே என்று விஜய்க்கு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தநிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார்.

’நாளைய முதல்வரே’- திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்: பரபரப்புக்கு மத்தியில் நிர்வாகிகளைச் சந்தித்த விஜய்
விஜய்
  • Share this:
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே  தெரிவித்துள்ளார். இதற்கேற்ப கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளனர். இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குவதற்கு முன்னோட்டமாக தற்போது திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகியுள்ளது.

வழக்கமாக திரைப்படம் வெளியாகும் போஸ்டர்களில் இருந்து மாறுபட்டு விஜய்  முதலமைச்சர் என்று சொல்லும் வகையில் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்களுக்கு விஜய் புகைப்படத்தை அச்சிட்டு,
இருபெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும், இளம் தலைவரே நாளைய தமிழக முதல்வரே, 2021 உங்கள் தலைமையில் அமையட்டும், தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்...


என்கிற வாசகங்களுடன் திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கத்தினர் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

தலைமை ஒப்புதலுடன் தற்போது திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் விரைவில் சென்னை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற போஸ்டர் ஒட்டப்படவுள்ளதாக மக்கள் இயக்க மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
 

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜயகாந்த் போல் விஜயும் விரைவில் நேரடி அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் மத்தியிலும் பேசப்படுகிறது. நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பா.ஜ.கவில் சேரவுள்ளதாக அண்மையில் வந்த தகவலை அவர் மறுத்த நிலையில் மக்கள் இயக்கத்தின் போஸ்டர் முக்கியத்துவம் பெறுகிறது.

நிர்வாகிகளுடன் விஜய்


திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பரபரப்பான  அரசியல் போஸ்டர்கள் நேற்று ஒட்டப்பட்டிருந்த நிலையில் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகள் விஜயை சந்தித்துள்ளனர்.


குறிப்பாக திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜயின் பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது அரசியல் கட்சி குறித்த எதிர்பார்ப்பு, களநிலை ஆலோசனைகள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading