ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு… வைரலாகும் வீடியோக்கள்…

ரசிகர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு… வைரலாகும் வீடியோக்கள்…

ரசிகர்கள் உடனான சந்திப்பின்போது விஜய்.

ரசிகர்கள் உடனான சந்திப்பின்போது விஜய்.

வாரிசு படத்தின் ஹேர் ஸ்டைலுடன் படு உற்சாகமாக காணப்பட்ட விஜய், ரசிகர்களை பார்த்து கையசைத்து, அவர்களின் வரவேற்பை ஏற்றார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் விஜய் தனது ரசிகர்களை பனையூர் அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  நடிகர் விஜய் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதை தள்ளி வைத்திருந்த நடிகர் விஜய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பனையூரில் அவரது அலுவலகத்தில் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த சில ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

  அதற்காக நடிகர் விஜய் இன்று தனது அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். இனோவா கிரிஸ்டா காரில் ரசிகர்களின் ஆரவாரத்தோடு  "அழகிய தமிழ்மகனாக " வந்திறங்கிய  நடிகர் விஜய், வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார்.

  வாரிசு படத்தின் ஹேர் ஸ்டைலுடன் படு உற்சாகமாக காணப்பட்ட விஜய், ரசிகர்களை பார்த்து கையசைத்து, அவர்களின் வரவேற்பை ஏற்றார். ரசிகர்களை விஜய் சந்திக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay