’பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா விஜய்’... மாஸ்டர் பிசினஸ் ஓவர் - அப்டேட் வந்துருச்சு பாருங்க!

’பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா விஜய்’... மாஸ்டர் பிசினஸ் ஓவர் - அப்டேட் வந்துருச்சு பாருங்க!
மாஸ்டர்
  • Share this:
மாஸ்டர்  படத்தின் வியாபாரம் முடிவடைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் விஜய் - விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கைதி பட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் - விஜய் படத்தை இயக்கி வருவதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன.


வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்திருக்கிறது. சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.

லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் மாஸ்டர் படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருக்கும் நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரா தொடங்கி வெளிநாடுகளுக்கான விநியோகம் முடிவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் 3 மாதகாலம் இருக்கும் நிலையில் படத்துக்கான பிசினஸ் முடிவடைந்திருப்பது தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



மாஸ்டர் படத்தின் வியாபாரம் குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா விஜய் #BoxOfficeBaashaVIJAY என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய ரசிகர்கள் ட்விட்டர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க: அஜித்துக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
First published: January 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்