Home /News /entertainment /

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பின்னடைவு ஏற்படுமா? கோரிக்கையை நிராகரித்தது மாநில தேர்தல் ஆணையம்

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பின்னடைவு ஏற்படுமா? கோரிக்கையை நிராகரித்தது மாநில தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே கட்சிகளுக்கு பொதுச் சின்னம் அளிக்கப்படும்

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே கட்சிகளுக்கு பொதுச் சின்னம் அளிக்கப்படும்

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே கட்சிகளுக்கு பொதுச் சின்னம் அளிக்கப்படும்

    விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது ரசிகர்கள் மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்று கணிசமான அளவுக்கு மக்கள் பிரதிநிதிகளாக மாறியுள்ளனர்.

    இதையும் படிங்க :

    தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் காண உள்ளனர். அடுத்ததாக சட்டமன்ற தேர்தலிலும் விஜய் ரசிகர்கள் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலைப் பொருத்தளவில் நடிகர் விஜய் பக்குவமாக காய் நகர்த்துகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

    இதையும் படிங்க : நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம்... நீதிபதியின் 'ரீல் ஹீரோ' கருத்துக்கள் நீக்கம்

    அதாவது, தங்கள் இயக்கத்தின் சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்க மறுத்துள்ள தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    இதையும் படிங்க : பிக் பாஸ் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்? வெளிப்படையாக கூறிய சஞ்சீவ் வெங்கட்!

    அதில், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே கட்சிகளுக்கு பொதுச் சின்னம் அளிக்கப்படும் என்றும், விஜய் மக்கள் இயக்கம் அவ்வாறு பதிவு செய்யவில்லை என்பதால் பொதுச் சின்னமாக ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : காதலுக்கு மரியாதை போல ஃபீல் குட் படமாக தளபதி 66 - கதையைக் கேட்டு விஜய் சொன்ன அந்த விஷயம்!

    பொதுச் சின்னம் கிடைத்தால், தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பிரசார வியூகங்களை வகுக்க முடியும். இது மறுக்கப்பட்டதால் விஜய் மக்கள் இயக்கத்திற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், விஜய்யின் புகைப்படங்களை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் களம் இறங்குவார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி