Home /News /entertainment /

விநாயகர் சதுர்த்தி நாளில் நெற்றியில் சந்தனம், குங்குமத்துடன் ஐதராபாத்திற்கு பறந்த விஜய்…

விநாயகர் சதுர்த்தி நாளில் நெற்றியில் சந்தனம், குங்குமத்துடன் ஐதராபாத்திற்கு பறந்த விஜய்…

விஜய்யுடன் வரலட்சுமி சரத்குமார்.

விஜய்யுடன் வரலட்சுமி சரத்குமார்.

விஜய்யும், வரலட்சுமியும் சர்கார் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தில் விஜய்க்கு வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விநாயகர் சதுர்த்தி நாளில் நெற்றியில் சந்தனம் குங்குமத்துடன் வாரிசு படப்பிடிப்பிற்கு சென்னையில் இருந்து ஐதராபாத் சென்றார் விஜய்.

    நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து இன்று ஐதராபாத் சென்றார். அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம் செய்தார்.

    அப்போது நடிகர் விஜயுடன், தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ளார்.  அதில் இதற்கு முன் இது போன்ற ஐதராபாத் பயணத்தை அனுபவித்ததில்லை. இன்றைய பயணத்தில் தன் அருகில் நடிகர் விஜய் இருந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

    கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லை டேட்டிங் செய்கிறாரா தனுஷ் பட நடிகை? வைரலாகும் ஃபோட்டோ…

    அத்துடன் அவருடன் நிறைய பேசி சிரித்ததாகவும், அவர் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  வரலட்சுமி சரத்குமார் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.



    இவர்கள் இருவரும் சர்கார் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.



    அந்த படத்தில் விஜய்க்கு வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி