ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘அன்பு’னா என்ன? விஜய் சொன்ன க்யூட்டான குட்டி ஸ்டோரி இதுதான்..

‘அன்பு’னா என்ன? விஜய் சொன்ன க்யூட்டான குட்டி ஸ்டோரி இதுதான்..

விஜய்

விஜய்

இயக்குனர் வம்சியிடம் மறக்க முடியாத படத்தை கொடுத்ததற்கு நன்றி என தெரிவித்தார் நடிகர் விஜய்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இரத்தத்திற்கு சாதி, மதம் கிடையாது. அந்த ஒன்றையாவது நாம் இரத்தத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என விஜய் கூறியுள்ளார். 

வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விஜய் ரசிகர்கள் சுமார் 8,000 க்கும் அதிகமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதனால் நேரு உள் விளையாட்டு அரங்கு நிறைந்து இருந்தது.

விழாவின் தொடக்கத்தில் வாரிசு பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் பேசினர். அவர்களின் பேச்சுகளுக்கு மத்தியில், வாரிசு படத்தில் இடம்பெறும் பாடல்களை சங்கர் மகாதேவன், கார்த்தி மானசி, தமன் உள்ளிட்ட கலைஞர்கள் லைவாக பாடினர்.

படக்குழுவினர் அனைவரும் பேசிய பிறகு விஜய் மேடை ஏறினார். அப்போது நடிகர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி பேசினார் விஜய். அதேபோல் இயக்குனர் வம்சியிடம் மறக்க முடியாத படத்தை கொடுத்ததற்கு நன்றி என தெரிவித்தார்.

விஜய் பேச ஆரம்பித்த உடன் அவருடைய குட்டி ஸ்டோரியை கேட்க ரசிகர்கள் காத்திருந்தனர். படக்குழுவினர் பற்றி பேசிவிட்டு குட்டி ஸ்டோரிக்கு வந்தார் விஜய். வாரிசு குடும்ப படம், எனவே குடும்பம் சார்ந்த ஒரு கதையை கூறுகிறேன் என பேசினார்.

"ஒரு குடும்பத்தில் அண்ணன் - தங்கை இருந்தார்கள். அவர்களுக்கு தினமும் சாக்லேட் வழங்கப்படும். தங்கை தன்னுடைய சாப்பிட்டுவிடுவார், அண்ணன் தன்னுடைய அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்துச் செல்லலாம் என ஒரு இடத்தில் வைப்பார். ஆனால் இந்த தங்கை அதையும் எடுத்து சாப்பிட்டு விடுவார். இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் தங்கை தன்னுடைய அண்ணனிடம், அன்பு என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த அண்ணன், நீ தினமும் உன்னுடைய சாக்லேட்டை சாப்பிட்டு விடுவாய். என்னுடையதும் எடுத்து சாப்பிடுவாய், நீ சாப்பிட்டுவிடுவாய் என்று தெரிந்தும் நான் அங்கு வைப்பேன். அது தான்மா அன்பு என்று தெரிவித்தார். இந்த உலகிலேயே பெரிய விஷயம் அன்பு தான்" என அந்த கதையை முடித்தார் விஜய்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய மக்கள் இயக்கத்தை பற்றி பேசினார். அதில் மன்ற நண்பர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ரத்தத்திற்குதான் இந்த ஜாதி, அந்த ஜாதி என்பது கிடையாது, மதம் கிடையாது. இந்த ஒன்றையாவது நாம் இரத்தத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என விஜய் கூறிமார்.

எனக்குத் தோன்றுவதை புஸ்சி ஆனந்திடம் கூறுவேன். அவரும், மன்ற நண்பர்களும்தான் அதை செய்கின்றனர். அவர்களுக்கு என் நன்றிகள் என கூறினார்.

இந்த விழாவில் பேசிய தில் ராஜு, One One One Number One என தன்னுடைய பேச்சை தொடங்கினார். மேலும் No Doubt He is a Super Star என்றும் தெரிவித்தார். சமீபத்தில் அஜித்தைவிட விஜய் பெரிய நடிகர் என்று கூறியது சர்ச்சையான நிலையில், வாரிசு பட பாடல் வெளியீட்டு விழா மேடையிலும் அதை கூறினார் தில் ராஜு.

First published:

Tags: Actor Vijay, Actor vijay Speech, Vijay, Vijay Speech in Stage