மாஸ்டர் பட விநியோகஸ்தருக்கு ஏற்பட்ட பிரச்னை- விஜய் எடுத்த அதிரடி முடிவு?

கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது

மாஸ்டர் பட விநியோகஸ்தருக்கு ஏற்பட்ட பிரச்னை- விஜய் எடுத்த அதிரடி முடிவு?
நடிகர் விஜய்
  • Share this:
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாஸ்டர் பட விநியோகஸ்தருக்கு நடிகர் விஜய் உதவி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஓடிடி தளத்தில் பெரிய தொகைக்கு மாஸ்டர் படம் விலை பேசப்பட்டதாகவும், அதற்கு நடிகர் விஜய் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்ற விநியோகஸ்தர் லலித், ரிலீஸ் தேதி தள்ளிப் போவதால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பைனான்சியருக்கு அதிக வட்டி செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


இதனை அறிந்த நடிகர் விஜய், தயாரிப்பாளர் லலித்தின் நெருக்கடியை புரிந்து கொண்டு அவருடைய நிறுவனத்துக்கு இன்னொரு படம் நடித்துத் தர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சன் பிக்சர்ஸ் படத்தை அடுத்து லலித் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading