ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy Vijay: நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம்

Thalapathy Vijay: நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம்

விஜய்

விஜய்

பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் வந்த போது, அவரது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் விஜய்க்கு போக்குவரத்துத்துறை போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏராளமான நற்பணிகளைச் செய்து வருகின்றனர். கடந்த சில தேர்தல்களிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளனர்.

  இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, ரசிகர்கள் விஜய் உடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

  நான் செஞ்ச பாவம்... உடல்நிலை குறித்து உருக்கமாக பேசிய சீரியல் நடிகர் வேணு அரவிந்த்

  இந்நிலையில் தற்போது விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் வந்த போது, அவரது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதால் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.500 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Thalapathy vijay