Home /News /entertainment /

Beast Movie : பீஸ்ட் படத்திற்கு சக்சஸ் பார்ட்டி வைத்த விஜய்…

Beast Movie : பீஸ்ட் படத்திற்கு சக்சஸ் பார்ட்டி வைத்த விஜய்…

பீஸ்ட் படக்குழுவினருடன் விஜய்

பீஸ்ட் படக்குழுவினருடன் விஜய்

பீஸ்ட் படத்திற்கு கலவை விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் பாதிப்பு ஏற்படவில்லை.

பீஸ்ட் படத்திற்கு சக்சஸ் பார்ட்டியை படக்குழுவினருக்கு நடிகர் விஜய் வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

கலவை விமர்சனங்கள் வந்தாலும் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வசூலை அள்ளத் தவறவில்லை. ரூ. 150 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் படம் ரூ. 200 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தரப்பினர் படத்தை கொண்டாடினாலும், விஜய் சமீப காலமாக நடித்த படங்களில் மிகுந்த ஏமாற்றத்தை தந்த படம் பீஸ்ட் என அவரது ரசிகர்களே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் சக்சஸ் பார்ட்டி வைத்துள்ளார். இதில் இயக்குனர் நெல்சன், அனிருத், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க - 'சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ஷூட்டிங் தொடங்கியது… பாலிவுட்டில் சூர்யா

இதுதொடர்பான ஃபோட்டோவை வெளியிட்டுள்ள நெல்சன், அறிக்கை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

சக்சஸ் பார்ட்டி வைத்ததற்கு நன்றி விஜய் சார். இந்த விருந்து மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது. இந்த தருணத்தில் விஜய் சாரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு வாய்ப்பு அளித்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், காவ்யா மாறன் ஆகியோருக்கு நன்றி. நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் படம் நன்றாக அமைந்திருக்காது. அவர்களுக்கு நன்றி.



தடைகள் பலவற்றை உடைத்து எங்கள் மீது அன்பும், ஆதரவும் தந்த ரசிகர்களுக்கு நன்றி. எப்போதும் போல் விஜய் சாருடன் ரசிகர்கள் இருந்தனர். படக்குழுவுக்கு ஆதரவாக இருந்து ரசிகர்கள் பீஸ்ட்டை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றியுள்ளனர்.

இவ்வாறு நெல்சன் கூறியுள்ளார்.

நெல்சனின் ட்வீட்டை பாராட்டியும், கிண்டல் செய்தும் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க - அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பி.வி.சிந்து... இன்ஸ்டாவைக் கலக்கிய வீடியோ

பீஸ்ட் படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. பாடல்களும் ரசிகர்களின் பிரமாண்ட வரவேற்பை பெற்றன. இந்நிலையில், திரைக்கதையில் சுவாரசியம் ஏதும் காணப்படாததால், படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் பீஸ்ட்டிற்கு விஜய் சக்சஸ் பார்ட்டி வைத்திருப்பது சோஷியல் மீடியாவில் ட்ரால் மெட்டீரியலாக மாறியுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி