ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மூன்று மாதங்கள் ஓய்வில் செல்லும் விஜய்...!

மூன்று மாதங்கள் ஓய்வில் செல்லும் விஜய்...!

விஜய்

விஜய்

விஜய்யின் 65 வது படம் பீஸ்ட் தற்போது தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சில தினங்கள் முன்பு முடிந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் சில தினங்கள் அல்லது ஓரிரு வாரங்கள் மட்டுமே ஓய்வு எடுத்துக் கொள்கிறவர் விஜய். கடந்த பல வருடங்களில் முதல்முறையாக புதிய படத்தை தொடங்கும் முன் மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க விஜய் தீர்மானித்துள்ளார்.

விஜய்யின் 65 வது படம் பீஸ்ட் தற்போது தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சில தினங்கள் முன்பு முடிந்தது. பேட்ச் வொர்க், டப்பிங் என விஜய் தரப்பில் சொற்ப வேலைகளே உள்ளன. படவெளியீடு குறித்து சன் பிக்சர்ஸ் விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் இம்மாத இறுதிக்குள் பீஸ்ட் படத்திலிருந்து விஜய் முழுமையாக வெளியேறிவிடுவார்.

இதையடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிப்பு. உணர்வுப்பூர்வமான கதையாக இது இருக்கும் என வம்சி பைடிபள்ளி ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்தப் படம் தற்போது ப்ரீ புரொடக்ஷன் லெவலில் உள்ளது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதுவரை ஓய்வெடுக்க தீர்மானித்துள்ளார் விஜய். குடும்பத்துடன் வெளிநாடு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also read... சென்னையில் நடந்த புஷ்பா படத்தின் பிரஸ்மீட் படங்கள்...!

வம்சி பைடிபள்ளியின் படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. தனக்கு சம்பந்தமில்லாத நபர் தன்னை நேசிப்பதாக கற்பனை செய்து கொள்வது எரோட்டோமேனியா எனப்படும். படத்தின் கதை குறித்த இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay